புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ம.க., ஆதரவு.!

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 10 தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனுவையும் தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-23 03:25 GMT

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 10 தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனுவையும் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டும் தொகுதிகளை பிரித்துக்கொண்டது.


 



இதனால் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை நிறுத்தியது அக்கட்சியின் தலைமை. இந்த முடிவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனையடுத்து பாமக தலைமையிடம் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர்கள் பேசியதாக தெரிகிறது.

இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் பாமக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் அனைவரும் வாபஸ் பெற்றனர்.


 



மேலும், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாமக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனால் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Similar News