புதுச்சேரி: ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் கொள்ளை!

புதுச்சேரியில் ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் கொள்ளை!;

Update: 2021-10-17 10:11 GMT

புதுச்சேரி அண்ணா சாலையில் ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.13 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி அண்ணா சாலையை சேர்ந்தவர் மிஷ்ரா 48, இவர் ஆடிட்டராக உள்ளார். இவரது அலுவலகம் வீட்டின் மேல் மாடியில் உள்ளது. இவர் புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வருமான வரி கணக்குகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் ஜிஎஸ்டி வருமான வரி செலுத்துவதற்காக அளிக்கப்பட்ட ரூ.13 லட்சத்தை தனது அலுவலகத்தில் உள்ள மேஜையின் லாக்கரில் வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு தரை தளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் பின்னர் மறுநாள் அலுவலகத்திற்கு சென்றபோது கதவு திறக்கப்பட்டு இருந்ததை பார்த்து மிஸ்ரா அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது மேஜை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி அவர் பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:Sahil Online


Tags:    

Similar News