தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருகின்ற சட்டசபை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் அதிகளவிலான ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறுகின்ற மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.