தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு: புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரியில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-04 07:17 GMT

புதுச்சேரியில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதில் அரசு ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளது.

அதில் புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அது போன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும். அதே போன்று ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு அளிக்கப்படும். இதில் எவ்வித சமரசமும் இருக்காது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Statesman

Tags:    

Similar News