புதுச்சேரியில் இன்று 55 பேருக்கு கொரோனா உறுதி!
புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 55 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 24 பேர், காரைக்கால் 18 பேர், மாஹேவில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 55 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 24 பேர், காரைக்கால் 18 பேர், மாஹேவில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,27,479 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,852 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,137 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 490 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi