விமர்சனங்களுக்கு மத்தியில் புதுச்சேரி புதுமை படைக்கிறது: கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!
விமர்சனங்களுக்கு இடையில் புதுச்சேரி புதுமை படைக்கிறதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
விமர்சனங்களுக்கு இடையில் புதுச்சேரி புதுமை படைக்கிறது என்று கவர்னர் கூறியிருக்கிறார். டாக்டர் அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் மாணவர்கள் தயாரிக்கும் 150 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ஒரு நிகழ்ச்சியில் வருகின்ற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் மாணவர்களுக்கு செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
புதுச்சேரியில் 50 மாணவ மாணவிகள் இந்த பயிற்சிக்கு இடம்பெற உள்ளார்கள். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் நசீமா மரைக்காயர் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கூறுகையில்,புதுச்சேரியில் விஞ்ஞான எழுச்சியை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் அப்துல் கலாம் மண்ணில் இருந்து பார்க்க முடியவில்லை,ஆனால் அவர் விண்ணிலிருந்து இதை ஆசீர்வதிப்பார். இதைத்தான் அப்துல்கலாமும் கனவு கண்டார்.
பொம்மைகளில் கைகளில் வைத்து விளையாடிய மாணவர்கள் இப்போது செயற்கைக்கோள்களை வைத்து விளையாடுகிறார்கள். அப்துல் கலாமின் விஞ்ஞானி ஆக கனவு கண்டால் 180 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி பிரம்மாண்ட ஒரு முயற்சியாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆற்றலோடு உள்ளோம் குழந்தைகளுக்கு நிறைய ஆற்றல் உள்ளது. தற்போது புதுச்சேரி முன்னேறிக் கொண்டு வருவதாகவும், பெஸ்ட் புதுச்சேரியாக இதை மாற்ற பிரதமர் தலைமையிலான அரசாங்கம் இதை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மற்றவர்கள் விமர்சனம் செய்தாலும் தற்பொழுது புதுச்சேரி புதுமைப் படைப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News