புதுச்சேரி: சிறப்பு நிதியாக ரூ.2,328 கோடி வழங்க கோரிக்கை..
புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2,328 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு புதுச்சேரிக்கு சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஒரு கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு புதுச்சேரியின் தற்போதைக்கு தேவைகள் குறித்து எடுத்துரைத்து இருந்தார். இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது, புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். சிறு, குறு, நடுத்த தொழிற்சாலைகள் தொடங்க முதல் 3 ஆண்டுகளுக்கு அனுமதி பெற தேவையில்லை என்று அறிவித்துள்ளோம். புதுச்சேரியில் தற்போது நகர்ப்புற வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. கட்டிடங்களுக்கு அனுமதி ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் வேகமாக தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகிறது.
மேம்பாலங்கள் புதுவையில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க எங்களது அரசு மேம்பாலங்கள், ரிங்ரோடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் டிராம் வண்டிகள், டிரோன் டாக்சி போன்றவற்றை இயக்கவும் ஆய்வு செய்து வருகிறோம். இதன் காரணமாக புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2,328 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைத்து இருக்கிறார். இதற்கு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News