புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனை தொடர்ந்து சில மாதங்கள் கழித்த பின்னர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை வாடிக்கையாக உள்ளது.
அதே போன்று கடந்த மார்ச் மாதம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கூடி பட்ஜெட்டை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளது. இதற்காக சட்டசபையானது ஆகஸ்ட் 10ம் தேதி கூட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi