ஆபத்தில் காங்கிரஸ் - தி.மு.க ஆட்சி ? என்ன நடக்கிறது புதுவையில் ?

ஆபத்தில் காங்கிரஸ் - தி.மு.க ஆட்சி ? என்ன நடக்கிறது புதுவையில் ?

Update: 2021-01-18 10:17 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் இன்று காலை 10.15 மணியளவில் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாராயணசாமி உள்ளார். அங்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுச்சேரி பேரவை சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், ஆளுநர் கிரணம்பேடியை திரும்ப பெறக்கோரியும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டும் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

மேலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அம்மாநில தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நாராயணசாமி மீது அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக பெரும்பான்மையை நிரூபிக்க அ.தி.மு.க. கோர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பான காட்சிகள் இன்று நடைபெறும் என்று தெரிகிறது.

Similar News