'புத்தகம்' நல்ல பாடத்தை கற்றுத்தரும்: தேசிய புத்தக கண்காட்சியில் ஆளுநர் தமிழிசை உரை!
வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் இருக்கிறது. அது மட்டுமின்றி நல்ல பாடத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் இருக்கிறது. அது மட்டுமின்றி நல்ல பாடத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Honoured Sr.Journalists & Covid frontline workers of #Puducherry at National Press Day-2021 function.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 26, 2021
தேசிய பத்திரிகை தினம்-2021 விழாவில் புதுச்சேரியின் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் கோவிட் முன்னணி பணியாளர்களை கௌரவித்தேன்.@PMOIndia @HMOIndia @mansukhmandviya @MIB_India pic.twitter.com/Wcv4un2C2I
புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 25வது ஆண்டு தேசிய புத்தக கண்காட்சி கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
Honoured Sr.Journalists & Covid frontline workers of #Puducherry at National Press Day-2021 function.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 26, 2021
Role of media across the nation during Covid pandemic is commendable.
Puducherry is proud being the first State to vaccinate media persons declaring them as frontline workers. pic.twitter.com/Ij71ZxhQIU
இதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: நான் புத்தகம் படிப்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவள். படிக்கும் பழக்கம் வாழ்க்கையில் ஒரு நல்ல பாடத்தை கற்றுத்தரும். என்னை புதுப்பிப்பது புத்தகங்கள் மட்டுமே. எனக்கு எவ்வளவு பணிகள் இருந்தாலும் ஒரு மணி நேரம் ஆவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளேன்.