புதுச்சேரி: முதல் முறையாக நடைபெற்ற ஆதி புஷ்கரணி விழா!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா சிறப்பு.

Update: 2023-04-25 01:30 GMT

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு பெயர் பெற்ற திருக்காஞ்சி கெங்கவர நாதஸ்வரர் கோவில் சங்கர பரணி ஆதி புஷ்கரணி விழா தொடங்கி இருக்கிறது. இந்த விழா முதல் முதலாக  புதுச்சேரியில் நடைபெற்று இருக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் நீராடி வழிபாடு செய்தார்கள்.


நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும். மீன ராசியில் இருந்து இன்று மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்த விழாவின் தொடக்கமாக பூஜை, கணபதி ஹோமம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை மங்கள இசையுடன் விழா இனிதே தொடங்கியது. காலை 6.30 மணிக்கு கோ பூஜை, 7 மணிக்கு புஷ்கர கொடியேற்றம் நடந்தது. பின்னர் 2-வது கால சப்தநதி கலச பூஜை சிறப்பு யாகம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை புஷ்கரணி பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News