புதுச்சேரி - பண்டிகைக்கால உதவித் தொகையை ₹5,000 உயர்த்தி தர கோரிக்கை!

மாநில ஆட்டோ தொழில் சங்க சார்பில் பண்டிகை கால உதவி தொகையை ஐந்தாயிரம் ஆக உயர்த்தி தர கோரிக்கை.

Update: 2022-08-30 01:33 GMT

புதுச்சேரியில் நேற்று மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் மாநில அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த சங்கத்தின் தலைவர் சேகர் அவர்களுடைய தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் பொது செயலாளர் சேது செல்வம் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வேலைகள், எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


அந்தக் கோரிக்கைகளில் முதன்மையானது, அமைப்புசாரா சங்கத்தின் தொழிலாளர்கள் ஆக இருப்பவர்களுக்கு வருடா வருடம் தீபாவளி போனஸ் மற்றும் பண்டிகை காண உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை உதவி தொகையானது மிகவும் குறைவான அளவில் தான் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இவற்றை உயர்த்தி தருவதற்கான கோரிக்கையும் இந்த பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப் பட்டது.


எனவே பண்டிகைக்கால போனஸ் உதவி தொகையை ரூபாய் ஐந்தாயிரம் ஆக உயர்த்தி தரவேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி சட்டமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசருக்கு தங்களுடைய கருத்தை கொண்டு போய் சேர்க்கும் விதமாக இது நடத்தப்படும் என்றும் சங்கத்தின் தலைவர் அவர் கூறினார்.

Input & Image courtesy:Dailythanthi

Tags:    

Similar News