புதுச்சேரி: அவதார் முருகனின் சிலையை வடித்த இளைஞர்கள்... வியப்பில் மக்கள்!

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவதார் முருகனின் சிலையை வடித்து இருக்கிறார்கள்.

Update: 2023-04-10 02:28 GMT

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் சிவசுப்பிரமணியர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது குறிப்பாக முருகப்பெருமானின் வீதி உலா அவருடைய சிலை வைத்து நடைபெறுவது வழக்கம் அதில் முருகப்பெருமானின் சிலைகள் இடம் பெரும். பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புது வடிவத்தில் முருகர் சிலையை வடிவமைத்து இருக்கிறார்கள்.


பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். குறிப்பாக கடந்த 26 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் இந்த கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முக்கிய நாளான நேற்று கடலூர் புதுச்சேரி சாலை ரொட்டி சாவடி அருகில் உள்ள ஆற்றங்கரையில் 108 காவடி, லாரி டிராக்டர், சேடல், கிரேனில் சாமியை அலங்கரித்து கூட்டமாகவும் தனியாகவும் அலகு குத்திக்கொண்டு அரோகரா என்று முருகனின் நாமத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வந்தார்கள்.


அப்படி முருகன் சிலையை வைத்து வீதி உலா வரும் பொழுது அவதார் முருகன் என்று ஒரு புதிய சிலையை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்து இருந்தார்கள். குறிப்பாக அவதார் படத்தில் வரும் ஹீரோவை தத்துரூபமாக வடிவமைத்து அதில் முருகன் சிலையையும் இணைத்து இருந்தார்கள், இது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News