புதுச்சேரிக்கு எப்பொழுது மாநில அந்தஸ்து கிடைக்கும்: முதல்வர் கருத்து என்ன?

புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்பிக்கை தரும் விதமாக முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார்.

Update: 2023-01-02 00:33 GMT

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் ஆளும் கட்சியும் பெரும் கோரிக்கைகளை விடுத்து வருகிறது. அந்த வகையில் விரைவில் மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கப்படும் என்று நம்பிக்கை தரும் விதமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கூறியிருக்கிறார். மேலும் இந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 470 வழங்கப்படும் என்று கூறுகிறார்.


செய்தியாளர்களிடம் நேற்று உரையாடுகளில் முதலமைச்சர் ரங்கசாமி கூறும் பொழுது, சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகமாக இருந்து வருகிறத. எனவே புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மூலமாக அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஓராண்டில் தங்கள் ஆட்சியில் சிறப்பாக செய்யப்பட்டதன் வெளிப்பாடாக இது பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் அரசு அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படப்படும் என்றும், அரசின் எந்த உதவியும் பெறாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்.


பொங்கல் பரிசுத் தொகையின் மதிப்பான ₹.470 அங்கன்வாடி மூலம் தரப்படும் என்றும், நான்கு மாத அரிசி பணம் மொத்தமாக சேர்த்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2400ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ.1200ம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News