புதுச்சேரி, பெங்களூருவுக்கு விமான சேவை விரைவில் தொடக்கம்!

Update: 2022-03-03 04:59 GMT

மத்திய அரசு, நாட்டில் அதிகமான விமான சேவையை அதிகரிக்கின்ற நோக்கத்தில் புதிய விமான சேவையை அறிவித்தது. அதற்காக உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான்வழியாக இணைப்பதற்கான பாதி கட்டணத்தை விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் என அறிவித்தது.

அதே போன்று புதுச்சேரியிலும் உதான் திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் விமான சேவைகள் முற்றிலும் தடைபட்டது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து விமானத்தை இயக்குவதற்கு 6 விமான நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இது பற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில், மீண்டும் விமான சேவை மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கும். முதற்கட்டமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஐதராபாத்துக்கும் விமான சேவை தொடங்குகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: iStock

Tags:    

Similar News