புதுச்சேரி: அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டத்திற்கு பாஜக வரவேற்பு..
CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஆனது நேற்று காலாபட்டியில் நடைபெற்றது. இந்த ஒரு கூட்டத்திற்கு மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கி கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டத்தில் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன், ரிச்சர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதை பல்வேறு தரப்பினர்களும் ஆதரித்து இருக்கிறார்கள். புதுவை மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடி சிறப்பு நிதியுதவியாக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிப்பது.
மேலும் அதிக அரசு முயற்சியின் காரணமாக ஆயுஷ் மருத்துவமனை மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்போடு தற்போது கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் தற்பொழுது CBSE பாடத் திட்டம் ஆனது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து. இந்திய மக்கள் அனைவருக்கும் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை புரிய வைத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனம் நிறைந்து பாராட்டுக்கள் என்றும் கூட்டத்தில் முக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News