பட்ஜெட்டை சிறப்பாக நடத்திய சபாநாயகர் ஏம்பலம் செல்வம்: பாராட்டு தெரிவித்த பா.ஜனதா அணி!

கூட்டத்தொடரை சிறப்பான முறையில் கையாண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அவர்களுக்கு பா.ஜ.க இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்து இருக்கிறது.;

Update: 2023-04-03 01:00 GMT
பட்ஜெட்டை சிறப்பாக நடத்திய சபாநாயகர் ஏம்பலம் செல்வம்: பாராட்டு தெரிவித்த பா.ஜனதா அணி!

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்ற முடிந்து இருக்கிறது. கூட்டத் தொடரை சபாநாயகர் செல்வம் சிறப்பான முறையில் கையாண்டதாக தற்போது அவருக்கு பல்வேறு அணியே சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. குறிப்பாக திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக அவர் செயல்பட்டதாகவும் அணியினை சேர்ந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.


புதுவை சட்ட சபையில் பட்ஜெட் கூட்டுத்தொடர் நிறைந்து முடிந்து இருக்கிறது. கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்டதாக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்களும் இணைந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருடனும் இணக்கமான முறையில் புதுவை மக்களுக்கு நன்மை பயக்கும் விதமான விவாதங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் ஒரு இணைப்பு பாலமாக அவர் செயல்பட்டதாகவும் கூறி இருக்கிறார்கள்.


இது தொடர்பாக அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் இன்ஜினியர் சிவக்குமார் தலைமையில் சபாநாயகர் செல்வம் அவர்களை சந்தித்து சார்பில் அறிவித்து பூங்கொத்துக்களை கொடுத்து தங்களுடைய கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News