ரேஷன் அட்டைதாரர்களுக்கு 300 சிலிண்டர் மானியம்: புதுவை முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 300 கேஸ் சிலிண்டர் மானியம் வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
புதுச்சேரியில் தற்போது சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது நடைமுறை. அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்து இருந்தது. இதற்காக மாநில திட்ட குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி புதுவை மாநிலத்திற்கு என முழுமையான பட்ஜெட் தொகையாக 11,600 கோடியை ஒடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு மத்திய அரசும் தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் காரணமாக புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை மீண்டும் சட்டசபை கூடியது முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 70 முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவி தொகை, மகளிர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு, முதல் முறையாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் புதுவையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300 கேஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 50,000 வைத்து தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும் என்றும், 50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Malaimalar