புதுச்சேரி: 2 ஆண்டில் ரூ.1,150 கோடி திட்டப்பணிகள் நிறைவு..

2 ஆண்டுகளில் மத்திய அரசினால் ரூ.1,150 கோடியில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-06-29 04:41 GMT

புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்திய அரசு பொதுச் செடியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு முன்னேற்ற நலத்திட்டங்கள் அங்கு நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தான் வகிக்கும் துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் பல்வேறு செய்தி நிபுணர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் நலத்திட்டங்கள் குறித்த விளக்குகிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு 2 ஆண்டு பணிகளை முடித்து 3-வது ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. 2 ஆண்டில் ரூ.1,150 கோடி திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


பொதுப்பணித்துறை மூலம் சுமார் ரூ.201 கோடிக்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. இப்போது ரூ.341 கோடிக்கு வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்ததாக ரூ.201 கோடிக்கு வேலைகள் செய்ய உள்ளோம். இதுவரை 130 கி.மீ. சாலைகள் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.134 கோடிக்கு வேலைகள் நடந்துள்ளது. ரூ.1,150 கோடிக்கு திட்டப்பணிகள் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் பிற துறைகளில் கட்டிட பணிகள் என ரூ.105 கோடிக்கு வேலை நடந்துள்ளதாக அமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News