மழை வெள்ள பாதிப்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை!
கனமழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
கனமழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
மேலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்ததால், அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தை சரிசெய்யும் பணியில் புதுச்சேரி அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என்று அனைத்து அரசு நிர்வாகத்தையும் முதலமைச்சர் ரங்கசாமி முடுக்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பு பற்றி ஆய்வு செய்வதற்கு மத்திய குழு நாளை (22ம் தேதி) வருகிறது. இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மழையால் சேதமடைந்த பயிர்கள் மற்றும் பொருட்களுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் நிதியை கேட்பது உள்ளிட்டவை பற்றியும் இந்த ஆலோசனையில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi