புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு சலுகை வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிய தொழிற்சாலைகளை தொடங்கும்போது அவர்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிய தொழிற்சாலைகளை தொடங்கும்போது அவர்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 15) காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் இருந்தவாறு காணொளி மூலம் பங்கேற்று பேசியதாவது: சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவும் நிதியுதவி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், புதுச்சேரியில் தொழிற்சாலையை மேம்படுத்த புதிய தொழிற்சாலைகள் அமைப்பது அவசியமாகும். தொழிற்சாலைகளை தொடங்க முன்வருபவர்களுக்கு மத்திய அரசு சலுகைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: ANI