விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்: புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்!

விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Update: 2023-02-15 01:28 GMT

புதுச்சேரியில் பால் தட்டுப்பாட்டை போகும் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் தற்பொழுது கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மலர்க் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. இதனுடைய நிறைவு விழாவில் முதலமைச்சருக்கு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் கூறுகையில் பால் தட்டுப்பாட்டை போக்குவதற்கு விவசாயிகள் கால்நடை வளர்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்.


சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்கள் பேசுகையில், புதுச்சேரி அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும், அறிவிக்காத பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவித்தப்படி 11 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.


மேலும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை வேளாண் துறை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு முப்பதாயிரத்திற்கு அதிகமான மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதுச்சேரி மண்ணிற்கு ஈர்ப்பு விளைபொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டும் தோட்டக்கலை மூலமாக விவசாயிகள் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதை தற்போதைய அரசு நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நான் முதலில் பதவியேற்ற துறை விவசாயத்துறை அமைச்சர் ஆக பதவியேற்று இருந்தேன் அவர் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News