ஜனாதிபதி அடுத்த மாதம் புதுச்சேரி வருகை.. பல்வேறு நலத்திட்டங்களை பெற இருக்கும் பொதுமக்கள்!
ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் புதுச்சேரி வருகை.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பெண்களுக்கான கேஸ் மானியம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அல்லது இருக்கிறார் அந்த பேட்டியில் அவர் கூறும் பொழுது புதுவை வாழ் மக்களுக்கு மாநிலத்தில் சிறந்த முறையில் மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது நாம் சுகாதாரத் துறையில் முதல் இடத்தில் உள்ளோம் ஜிம்பரி இலவச மருத்துவ சிகிச்சை தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 வருடமாக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். திட்டங்கள் விரைவாக நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. எல்லா தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அரசின் செயல்பாடு உள்ளது. உள்ளாட்சித் துறையின் மூலம் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கிறது. 100 நாள் வேலை திட்டமும் தொடங்கியுள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அடுத்த மாதம் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் புதுச்சேரியில் வருகை தர இருக்கிறார். அப்போது சித்த மருத்துவக்கல்லூரி, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தர இருக்கிறார் என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: The Hindu