700 மருத்துவ ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை: புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் 700 மருத்துவ ஊழியர்களுக்கு பணி நியமனம் ஆணையை வழங்கி இருக்கிறார்.

Update: 2023-03-09 01:28 GMT

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்கள். அரசு இந்திரா காந்தி மருத்துவமனையை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். குறிப்பாக இந்த போராட்டம் தொடர்ந்து அரசு இதை முக்கிய பிரச்சினைகள் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது. குறிப்பாக இருநூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு தற்பொழுது பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.


புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ளது தான் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இங்கு சுமார் 2011ம் ஆண்டில் இருந்து 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். எனவே இவர்கள் தங்களுக்கு பணி நியமன ஆணையை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.


12 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிறுவனத்தின் கீழ் பணி புரியும் எங்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வருமானத்துடன் தற்போது வரை பணிபுரிந்து வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். போராட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய துணைநிலை ஆளுநர் மாலை ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து பணி நிரந்தரம் ஆணையை முதல்வர் வழங்கினார்.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News