புதுச்சேரி கடலில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார்: காரணம் என்னவென்று தெரியுமா?

புதுச்சேரி கடல் மற்றும் கடலோர பகுதிகளில் தற்பொழுது காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Update: 2023-02-28 01:15 GMT

புதுச்சேரி கடல் மற்றும் கடலோர பகுதிகளில் தற்பொழுது காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நேற்று புதுச்சேரி புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் கடலில் திடீரென்று தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து புதுச்சேரி தேங்காய் தட்டு துறைமுகத்திலிருந்து வீரம்பாக்கம், வீராம்பட்டினம் குப்பம், நல்லவாடு,மூர்த்தி குப்பம் வரை 12 நாட்டிக்கல் மையில் தூரம் வரை சென்று சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள்.


காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுருக்கு வடிவ வலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 12 நாட்கள் மையில் தாண்டி வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. எனவே அதன்படி அடிப்படையில் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள் என்பதை அறியத்தான் இந்த சோதனை நடைபெற்றதாக கடலோர காவல் துறையினர் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.


குறிப்பாக நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்வேறு மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றார்கள். எனவே மீனவர்கள் தங்களுடைய எல்லைக்குட்பட்டு சரியான வலைகளை பயன்படுத்தி தான் மீன்களை பிடிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க இந்த ஒரு தீவிர சோதனை நடைபெற்றதாகவும் கடலோர காவல் படை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News