அடித்துக்கொள்ளும் புதுச்சேரி காங்கிரஸ் - மேலிட பொறுப்பாளரை அடித்து ஓடவிட்டனர்

புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்ற கோரி, தினேஷ் குண்டுராவை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2022-08-22 02:21 GMT

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்பிரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் ஒரு பிரிவாகவும், இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக்காலம் முடிந்து விட்ட காரணத்தினால், அவரை பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளார்கள். ஆனால் இதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காத காரணத்தினால், அங்கு உள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார்கள். எனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவரை மாற்றக்கோரி தற்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 


பிறகு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் கட்சியினரை முற்றுகையிட்டனர். அப்போது மாநில தலைவர் வாகனத்தில் ஏறி புறப்பட முயன்ற மேலிட பொறுப்பாளரை கட்சி நிர்வாகிகள் போகவிடாமல் அவருடைய வாகனத்தை முற்றுகையிட்டு, வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனால் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழலை காணப்படுகிறது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News