புதுச்சேரியில் 78 பேருக்கு கொரோனா வைரஸ்! 2 பேர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளனர்.;
புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளனர்.
இது பற்றி புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: புதுச்சேரியில் 4,677 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரி 50, காரைக்கால்- 19, மாஹே- 9 பேர் என மொத்தம் 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
புதிதாக ஏனாமில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 119 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 782 பேரும் என 901 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரி திருபுவனை வள்ளலார் நகரைச் சேர்ந்த 55 வயது ஆண், காரைக்கால் முருகராம் நகரைச் சேர்ந்த 57 வயது ஆண் என்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்துள்ளது.
Source: Hindu Tamil
Image Courtesy:Times Of India