புதுச்சேரி: அங்கன்வாடி குழந்தைகளின் நலனுக்கான, துணை நிலை ஆளுநர் அதிரடி உத்தரவு!
புதுச்சேரி: அங்கன்வாடி குழந்தைகளின் நலனுக்கான, துணை நிலை ஆளுநர் அதிரடி உத்தரவு!
அந்த வகையில் இன்று, அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அங்கன்வாடி மையத்தில் நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வழங்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 855 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த மையங்களில் வாரம் ஒரு முட்டை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று முட்டை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதனால் 28 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். இதற்காகப் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.68 கோடி கூடுதல் செலவாகும்.