காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் நேற்று (ஜூலை 14) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
முதலில் அன்னை தெரசா அரசு பள்ளிக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாணவர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். மேலும், பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தயாரித்த பொருட்களை ஆளுநருக்கு பரிசாக வழங்கினார்கள்.
Appreciated the Child Cabinet - 'Mock Parliament' show performed by the young children at Government Primary School in Karaikal.#Leadership #empower #AzadiKaAmritMahotsav @PMOIndia @HMOIndia @EduMinOfIndia @dpradhanbjp @DDNewslive @ddkpondy @DDNewsChennai @PTTVOnlineNews pic.twitter.com/56qxHDoGP3
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 14, 2022
அதனை தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு பின்னர் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi