புதுச்சேரி: G20 அமைப்பின் முத்தரப்பு கூட்டம் தொடக்கம்!
புதுச்சேரியில் இன்று 30 மற்றும் 31 ஜனவரி 2023-ல் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் 30 மற்றும் 31 ஜனவரி 2023-ல் நடைபெற உள்ளது. இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவுடன் இந்தோனேஷியா மற்றும் பிரேசில் இணைந்து முத்தரப்பு உறுப்பினர்களாக இந்த கூட்டத்தை நடத்துகின்றன. இக்கூட்டத்திற்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா இணைந்து தலைமை வகிக்கிறார். G20 நாடுகளின் தேசிய அறிவியல் அகாடமிகளை உள்ளடக்கிய S20 செயல்பாட்டுக் குழு, 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைமைத்துவத்தின் போது தொடங்கப்பட்டது.
இது ஒருமித்த கருத்துகள் அடிப்படையிலான அறிவியல் சார்ந்த பரிந்துரைகளை, சர்வதேச நிபுணர்கள் அடங்கிய பணிக்குழுக்கள் மூலம் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா குடியரசு, துர்கியே, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய G-20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 15 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் நடைபெறும் எஸ் 20 தொடக்கக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.
G20-ன் தலைமைத்துவத்தில் உள்ள இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, G20 அமைப்பை உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியம் கொண்ட, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக மாற்ற விரும்புகிறது. S-20 கூட்டத்தின் செயல் திட்டம் இந்தக் இந்தக் கொள்கையை பிரதிபலிக்கிறது. இந்த S-20 கூட்டம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் திட்டமிடல் மற்றும் பயன்பாட்டு அம்சத்தில் கவனம் செலுத்தும். அடுத்தடுத்த இறுதிக் கூட்டம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.
Input & Image courtesy: News