கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த புதுச்சேரி அரசு.!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது. இதனால் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்கு பின்னர் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2வது இடத்துக்கும் சென்றது.

Update: 2021-06-19 04:23 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது. இதனால் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்கு பின்னர் இந்திய அளவில் உயிரிழப்பு சேதம் 2வது இடத்துக்கும் சென்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரம் நடவடிக்கை எடுத்தது. இதனால் தொற்றின் வேகம் குறைந்த தற்போது உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


 



இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.




 


மேலும், மக்களின் ஆர்வம் குறையாமல் இருப்பதற்காக கடந்த 16ம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. அதன்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மேலும் அதிகரிப்பதற்காக அரசு சார்பில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் அருண் தலைமை தாங்கினார். இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தடுப்பூசி திருவிழாவை 2 நாட்களுக்கு நீட்டிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த தடுப்பூசி திருவிழாவின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 25 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.

Similar News