தனியார் மயமாகும் புதுச்சேரி அரசு பேருந்துகள்.? நாளை முதல் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்.!

தனியார் மயமாகும் புதுச்சேரி அரசு பேருந்துகள்.? நாளை முதல் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்.!

Update: 2020-12-27 17:46 GMT

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) தனியார் மயமாவதை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி அதன் ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தனியார் மயமானால் சாலைப்போக்குவரத்து கழகத்தில் வேலை செய்கின்ற 1000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேதனையுடன் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

இதில் டிரைவர், கண்டக்டர் என 240 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் அல்லது தினக்கூலி ஊழியராக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடத்தி வருவதால் பி.ஆர்.டி.சி. பேருந்துகள் ஓடவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் அனைத்துப்பிரிவு ஊழியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.ஆர்.டி.சி. தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் அப்பாவி ஏழை மக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக பொது மக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக அரசு தலையிட்டு வேலை நிறுத்தப்போராட்டத்தை வாபஸ்பெறுவதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Similar News