நிலத்தடி நீரை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டம்.. புதுச்சேரியில் விரைவில் அறிமுகம்..
நிலத்தடி நீரை மேம்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து புதிய திட்டம்.
புதுச்சேரியில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல், பராமரித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி முதலமைச்சர் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்று அலுவலகத்தில் நடந்தது. இந்த ஒரு கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். குறிப்பாக புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித்துறை அலுவல பொறியாளர்கள், தலைமை ஆணைய பொறியாளர், நிர்வாகிகள் என பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் இந்த கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் மேலும் நிலத்தடி நீர் குறித்து மத்திய அரசு சிறப்பு பகிலரங்கம் ஏற்பாடு செய்வதற்கும் கலந்தாலோசித்து இருக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் நிலத்தடி நீரின் தன்மை, தரம், கடல்நீர் உட்புகாதபடி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீரை சேகரித்து அதன் தரத்தை பராமரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு அதிகாரிகள், நிலத்தடி நீரை மேம்படுத்தும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். மேலும் இந்த கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு எப்படி பயிற்சி அளிப்பது, மத்திய அரசிடம் இருந்து இது தொடர்பான வழிமுறைகளை பெறுவது போன்றவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Input & Image courtesy: News