புதுச்சேரி: கல்வியின் தரத்தை உயர்த்த CBSC பாடத்திட்டத்துக்கு மாறும் அரசுப் பள்ளிகள்!

CBSC பாடத்திட்டத்துக்கு மாறும் புதுச்சேரி அரசுப் பள்ளிகள்.

Update: 2023-03-18 01:56 GMT

புதுச்சேரியில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வகையில் அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த பகுதியில் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்பொழுது 12-ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி திட்டத்திற்கு அரசு பள்ளிகள் மாற இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தன்னுடைய பட்ஜெட் தாக்கல் உரையின் போது தெரிவித்து இருந்தார். இது அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த மார்ச் 3 தாக்கல் செய்த முதல்வரும், நிதித்துறையை தன்னிடம் வைத்திருப்பவருமான ரங்கசாமி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் குறிப்பாக புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பு தான் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்தி வந்த புதுச்சேரி அரசு.  


தற்போது அந்த பாடத்திட்டத்தை கைவிட முடிவு செய்து இருக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு தங்கள் மாறப்போவதாகவும் அறிவித்து இருக்கிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் அரசு முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவித்து இருக்கிறது மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News