நாடாளுமன்றத்தில் செங்கோல்.. தமிழர்களுக்கு பெருமை.. புதுவை கவர்னர் தமிழிசை பாராட்டு..
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு.
இந்தியாவில் 75 வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறக்கப்பட இருக்கிறது. இந்த கட்டிடத்தில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த செங்கோல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கையால் நிறுவப்பட இருக்கிறது என்ற ஒரு செய்தி தற்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதி பரிபாலன முறையை உலகத்துக்கே வழிகாட்டக்கூடியதாக அமைந்திருந்தது.
இதன் காரணமாக திருக்குறளில் வரும் செங்கோன்மை அதிகாரம் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி முறைகளை பற்றி அழகாக எடுத்துரைத்து இருக்கிறது. இந்திய நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்தியாவில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கும் பொழுது நீதி தவறாமல் இருப்பதற்காக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு பிரதமருக்கு செங்கோல் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் திருவாடுதுறை ஆதினத்தை சேர்ந்த பெரியோர்களால் செய்யப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது என்பது தமிழர்களின் சிறப்பு. தற்பொழுது இந்தியா அதை பின்பற்றி 75 ஆண்டுகள் நிறைவு செய்வதில் ஒட்டி புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கைகளால் திறக்கப்பட இருக்கிறது.
மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரியமான செங்கோலை அங்கு நிறுவமே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரியமான செங்கோலை அங்கு நிறுவ இருக்கிறார். இதற்காக பிரதமருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக" கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: News