இது படித்தால் தற்கொலை எண்ணமே வராது.. புதுவை கவர்னர் தமிழிசை கொடுத்து சூப்பர் அட்வைஸ்..

ராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணமே வராது என்று புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்.

Update: 2023-05-14 01:24 GMT

புதுச்சேரியில் தற்பொழுது 3 நாட்களாக கம்பன் விழா சிறப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த கம்பன் விழா தொடக்க நிகழ்ச்சி ஆகும் நேற்று கம்பன் களை அரங்கத்தில் நடந்த விழாவிற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கம்பன் கழகப் புலவரான முதலமைச்சர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் வரவேற்று பேசியிருக்கிறார். இந்த விழாவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து சிறப்புரை இருக்கிறார். கம்பன் தொடர்பான புத்தகங்களை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.


தொடர்ச்சியான வண்ணம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகையில் இது பற்றி அவர் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ராமாயணத்தை படித்தால் இளைஞர்கள் கவலைகளில் இருந்து விடுபட முடியும். குறிப்பாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்து மாணவர்கள் இளைஞர்கள் விடுபட ராமாயணம் மிகச் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.


நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் இருந்து நாம் எப்படி வெளிவருவது என்பது தொடர்பான முடிவுகளை ராமாயணம் நமக்கு வழங்கும்? வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சனைகளை கடந்து வந்து சாதிப்பது தான். ஒரு சில பிரச்சனைகளுக்காக நாம் தற்கொலையை நாடினால் அது கோழைத்தனம். உடலுக்கும், மனதுக்கும் நன்மை தருவது ராமாயணம். இதனை படித்தால் யாருக்கும் மன அழுத்தம் வராது. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று ராமாயணம் சொல்லி கொடுக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News