போராட்டம் வேண்டாம்.. ஆக்கப் பூர்வமாக செயல்படலாம்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை வேண்டுகோள்!
போராட்டம் நடத்தாமல் ஆக்கபூர்வமாக செயல்பட புதுச்சேரி கவர்னர் தமிழிசை வேண்டுகோள்.
தமிழக எம்.பிக்களுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்கவில்லை போராட்டம் நடத்தாமல் ஆக்கபூர்வமாக செயல்படலாம் என்றுதான் கூறினேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்பொழுது செயல்பட்டு வரும் ஜிப்மர் கட்டணம் நிர்ணயிப்பதை நிறுத்தக்கோரி எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் போராட்டம் நடந்தியதை அடுத்து ஆளுநர் தமிழிசை விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக போராட்டத்தை செயல்படாமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்யலாம் என்று தான் குறிப்பிட்டு இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''புதுச்சேரி சுகாதாரத்துறை திருவிழாவில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்தனர். 150 பேர் உடல் உறுப்பு தான உறுதி மொழி செய்தனர். 200 பேருக்கு கண்ணாடி தரப்பட்டது. ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன் அது அதிகமாக இருப்பதால் குறைக்கக்கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன். அது நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஜிம்பர் மருத்துவமனைக்கு தரும் நிதி உதவி உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். எம்.பிக்கள், இயக்குநரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன். மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக போராட்டத்தை நடத்தாமல் அதற்கு யாரிடம் போய் கேட்கலாம் என்று ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதுதான் எனது கருத்து" என கூறுகிறார்கள்.
Input & Image courtesy: The Hindu