தி.மு.க இரட்டை வேடத்தில் செயல்படுகிறது.. கவர்னர் தமிழிசை தாக்கு!
தி.மு.க. அரசு 2 வகையாக செயல்படுகிறது என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு.
தெலுங்கானா உதயமான தினத்தை கொண்டாடும் வகையில், கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதயமான நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பல்வேறு தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கண்கவர் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கவர்னர் தமிழிசை பேட்டி அளித்து இருக்கிறார். அப்பொழுது அவர் கூறும் பொழுது, என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.
தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன். பல்வேறு நிகழ்ச்சியில் கவர்னரை அழைக்க மாட்டார்கள் இங்கும் அரசியல் நடக்கிறது. ஆனால் அதே கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை? என்று கேள்வி கேட்பார்கள் என கூறினார்.
Input & Image courtesy: Maalaimalar