தி.மு.கவின் 2 ஆண்டு சாதனை இதுதான்.. பளிச்சினு பதில் கூறிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை!
அறிவிப்புகளை திரும்பபெறும் அரசாக தி.மு.க அரசு உள்ளது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விமர்சனம்.
தமிழகத்தில் தற்பொழுது ஆளுநர் மற்றும் அரசிற்கு இடையில் சர்ச்சை எழுந்து இருக்கிறது. குறிப்பாக ஆளுநரை அவர்களை எப்படியாவது தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சூழ்ச்சி செயல்களை திமுக தொடர்ச்சியான வகையில் செய்து வருகிறது. காரணம் தமிழக ஆளுநர் திமுகவிற்கு சாதகமாக செயல்படவில்லை என்பதுதான். தொடர்ச்சியான பள்ளம் தமிழக ஆளுநர் அவர்கள் திமுகவின் உண்மை முகம் பற்றி பொது இடங்களில் பேசி வருகிறார். இதன் காரணமாக தான் தமிழகத்தில் இந்த ஒரு சர்ச்சை எழுந்து இருக்கிறது இது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறுகின்றனர். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநர் வேண்டாம் என்றால், உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு எல்லோருக்கும் கருத்து சுதந்திரத்தை கொடுத்து இருக்கிறது. எனவே ஆளுநரின் கருத்துக்களுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம், அதைத்தவிர ஆளுநர் கருத்தே கூட கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பு இருக்கிறார். 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து தி.மு.க பேசி வருகிறது. ஆனால், இந்த அரசு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தாமல் அவற்றை திரும்ப பெற்ற அரசாகத்தான் திமுகவை பார்க்க முடிகிறது, இதுதான் திமுகவின் இரண்டு ஆண்டுகளின் சாதனைஎன்ற" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: The Hindu