பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!
புதுச்சேரி மின்சார ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் இது கட்டாயம் நடக்கும் என்று ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் எச்சரிக்கை.
புதுச்சேரியில் மின்சார ஊழியர்கள் பணிக்கு மீண்டும் திரும்பாவிட்டால், அது அவசியம் சேவைகள் பராமரிப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் எச்சரித்து இருக்கிறார். முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மாலை செய்து சிறப்பிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அப்பொழுது மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து அவர் இது பற்றி கூறுகையில், புதுச்சேரியில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார துறை ஊழியர்கள் பணிக்க திரும்பா விட்டால் எஸ்மா சட்டம் பாயும். போராட்டத்தை கைவிட்டு மின்துறை ஊழியர்கள் பணிக்கு திருப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Input & Image courtesy: Nakkheeran News