புதுச்சேரி: அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் அமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு.

Update: 2022-08-31 12:34 GMT

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பு வரை CBSC பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அரசு பள்ளிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வருகின்றதா குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. ஆங்கில வழிக் கல்வியும் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மூலம் பல்வேறு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அங்கு சேர்ப்பதற்கான சூழலை உருவாக்கி உள்ளது.


அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விகள் கற்பிப்பது மட்டுமில்லாத தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களையும் அங்கு அமல்படுத்த புதுச்சேரி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது பற்றி கூறிய அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்ட அமல்படுத்தப்படும். தற்போது மாணவர்கள் சிறப்பு பஸ் பஸ்களில் ரூபாய் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த பஸ் சேவை இலவசமாக வழங்கப்படும். 81 தலைப்பில் ஆசிரியர் நிலை இரண்டு பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக அடுத்த பாதம் நிரப்பப்படும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் கூறுகிறார்.


மேலும் அவர் புதுவை சட்டசபையில் காவல்துறை, சிறை துறை, பள்ளிக்கல்வி மற்றும் உயிர்கல்வி, தொழில்கள், மின்விசை ஆகிய மாநில கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் நம சிவாயம் அவர்கள் பேசுவதில் மேற்கண்ட கருத்தை பதிவு செய்துள்ளார்.

Input & Image courtesy: 



 


Tags:    

Similar News