புதுச்சேரி: பெண் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை கொடுத்த முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரியில் பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் பணி குறைப்பு.
புதுச்சேரியில் அரசு துறைகளில் பணியாற்று பெண்களுக்கு வெள்ளிக்கிழமையில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக தங்களுடைய முடிவை தற்போது அறிவித்து இருக்கிறார்கள். இந்த ஒரு அறிவிப்பு காரணமாக அரசு பெண் ஊழியர்களுக்கு இடையில் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் தகவலாகவே அமைந்திருக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி ஒழிப்பு பற்றிய செயல் திட்டம் வகுப்பது சம்மந்தமான இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின்னர் இந்த அறிவிப்பை பற்றி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறுகையில், பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் ஏற்றுள்ளார். தற்போது அரசு துறையில் அமலாகும். வெள்ளிக்கிழமை காலையில் பணிநேரத்தில் சலுகை தந்துள்ளார். வேலையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது புதுச்சேரியில் உள்ள பெண்கள் இந்த அறிவிப்பு பற்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுமார் 1000 செல்வ சலுகையும், நேர சலுகையும் தரப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் பணிநேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். காலை 9 மணிக்கு பதிலாக 11 மணி என்று பணிமாற்ற கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
Input & Image courtesy: The Hindu News