புதுச்சேரி: முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் தம்பி ராமைய்யா.. என்னன்னு தெரியுமா?

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-05-05 00:30 GMT

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் தற்போது கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த திரைப்பட நடிகர் தம்பி ராமைய்யா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை சந்தித்து தன்னுடைய கோரிக்கை ஒன்றை முன் வைத்து இருக்கிறார். புதுச்சேரிக்கு வருகை தந்த பிறகு மரியாதை நிமித்தமாக அவர் புதுச்சேரி முதல்வர் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்கு வருகை தந்திருந்தார்.


அப்போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அவருடன் சமீபத்தில் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற சினிமா மக்கள் தொடர்பாளர் குமரனும் என்பவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் குமரன் அவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் தற்பொழுது கொரோனா காலகட்டத்திற்கு முன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நோய் தொற்றுக்குப் பிறகு இந்தத் தொகையானது தற்போது 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.


பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு காட்சிகள் புதுச்சேரியில் நடைபெறுவது வழக்கம். இவ்வளவு அதிகமாக படப் பிடிப்பு கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக அரசிற்கு வருமானம் குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 6 மாதமாக சூட்டிங்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். மாநில அரசு இதற்கு ஒரு தகுந்த முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News