அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேர சலுகை... புதுச்சேரியில் மட்டும்..

அரசு பெண் ஊழியர்களுக்கு வேலைநேர சலுகை இன்று முதல் அமல்.

Update: 2023-05-06 06:05 GMT

புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்தபடி ஏற்கனவே அரசு பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நேர சலுகையை அளித்து இருக்கிறது. அந்த ஒரு சிறப்பு சலுகை நேற்று முதல் அமலாகி இருக்கிறது. புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமை பூஜைகள் மேற்கொள்ள வசதியாக மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8.45 மணிமுதல் 10.45 மணிவரை 2 மணிநேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த மாதம் 27-ந்தேதி அறிவித்து இருந்தார்.


கவர்னரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் சிறப்பு அனுமதி மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் விளைவாக அரசுப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த ஒரு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது வெள்ளிக்கிழமை பெண்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக அலுவலகத்திற்கு வருகை தரலாம். மேலும் பெண்கள் மட்டும் பணி புரியும் இடங்களில் இந்த அனுமதியை சுழற்சி முறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு அனுமதி தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளன. அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அரசு பெண் ஊழியர்களுக்கான இந்த சிறப்பு அனுமதியானது நேற்று தினம் முதல் அமலுக்கு வந்தது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News