புதுச்சேரி: ரூ.32 கோடியில் விரைவில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள்... முதல்வரின் அட்டகாச அறிவிப்பு!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 32 கோடியில் விரைவில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

Update: 2023-04-15 04:19 GMT

புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 கோடி செலவில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் அமைய உள்ளது. உள்சாலைகள் புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.3.57 கோடி செலவில் உள்சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், தலா ரூ.67 லட்சம் செலவில் மாணவ, மாணவிகள் விடுதி புனரமைக்கும் பணியும் விரைவாக தற்பொழுது நடைபெற உள்ளது. 


இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கல்லூரி இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டனர். இப்பணிகளை தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் அதிநவீன வசதிகள் கொண்ட 11 அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.


இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் உள்ளிருப்பு மருத்துவர்கள் தங்குவதற்காக ரூ.32 கோடி மதிப்பீட்டில் 240 அறைகளுடன் 8 மாடி விடுதி கட்டுமான பணிகளும் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை, கல்லூரி, நூலகம் மற்றும் மேலும் அனைத்து கட்டிடங்களையும் புனரமைக்க ரூ.6.50 கோடி செலவில் பல்வேறு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News