புதுச்சேரி: டிஜிட்டல் முறைக்கு மாறி வரும் அரசு மருத்துவமனைகள்..

புதுச்சேரியில் டிஜிட்டல் முறைக்கு மாறிவரும் அரசு மருத்துவமனைகள்.

Update: 2023-06-07 03:47 GMT

புதுச்சேரியில் தற்போது அரசு மருத்துவமனைகள் முற்றிலுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் முறையில் நோயாளிகளின் மருத்துவ பதிவேடுகளை பராமரிக்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சுகாதாரத்துறை நடவடிக்கையின் பேரில் அரசு பொது மருத்துவமனைகளில் முதல் முறையாக டிஜிட்டல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒருவர் எங்கு சிகிச்சை பெற்றாலும் அங்கு பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் இவரால் இந்த ஒரு டிஜிட்டல் திட்டம் மூலமாக பயன்பெற முடியும்.


இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவர் இந்தியாவிலுள்ள எங்கு மூலையில் சென்ற சென்றாலும் அவருடைய குறைபாடு என்ன? மாதிரியான சிகிச்சைகளை முன்பு பெற்று வந்தார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். முதல் கட்டமாக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


நோயாளிகள் ஒரு முறை மட்டும் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும் அவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணின் அடிப்படையில் நோயாளிகள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ பரிசோதனை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News