புதுச்சேரி - அரசு மருத்துவமனையில் முதல் மரபணு ஆய்வகம்!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதல் மரபணு ஆய்வகம்.

Update: 2022-12-30 01:54 GMT

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.56 கோடி செலவில் மரபணு வரிசை முறை ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் கலந்து கொண்டு புதிய ஆய்வகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.கே ரமேஷ் எம்.எல்.ஏ கலந்துகொண்டு இருக்கிறார்கள்.


மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் மைக்ரோ பயாலஜி துறை தலைவர் பொறுப்பு அதிகாரிகள் என பலரும் இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வகத்தில் வைரஸ் உருமாற்றம் குறித்து கண்டறியவும், அதாவது கரோனா உள்ளிட்ட வைரஸ்கள் குறித்து கண்டறிய உதவுகிறது. இதுபோன்று சோதனைக்கு கடந்த கடந்த காலங்களில் மாதிரிகள் பிற மாநிலங்களுக்கு தான் அனுப்பப்பட்டு வந்தது.


அதன் காரணமாக அவற்றின் முடிவுகள் கிடைக்க பத்து முதல் 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்பொழுது இரண்டு மூன்று நாட்களில் பரிசோதனை முடிவுகளை புதுச்சேரியில் இருந்தே அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆய்வகத்தில் புதுச்சேரியில் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளவும் முடியும். இதுதான் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட முதல் மரபணு ஆய்வகமாகும்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News