புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடையா? என்ன நடந்தது..
புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை.
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து இந்திய மருத்துவ கவுன்சில் கூறி இருக்கிறது. அரசு மருத்துவ கல்லூரி புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 180 எம்பிபிஎஸ் இடங்களில் ஆண்டு தோறும் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இட ஒதுக்கீடு என்பது 180 மாணவ மாணவிகள் இந்த ஒரு வாய்ப்பு பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் இதில் புதுவை சேர்ந்த மாணவர்கள் 131 பேருக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 பேர், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் 22 பேர் என மொத்தம் 180 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 'சென்டாக்' அமைப்பு மூலம் மாணவர் சேர்க்கையானது ஆண்டுதோறும் நடைபெறும். இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவார்கள்.
அதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கல்லூரிகளில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இடையே இந்த ஒரு சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.
Input & Image courtesy: News