சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மருத்துவ மாணவர்கள்.. சூப்பர் சான்ஸ் கொடுத்து புதுச்சேரி..
மருத்துவ மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து புதுச்சேரி அரசு..
புதுச்சேரியில் கால்நடை மருத்துவ படிப்பில் படித்து வரும் புதுச்சேரி மாணவர்கள் தற்போது சர்வதேச அளவில் வெளிநாடுகளில் இருக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு சென்று வர இருக்கிறார்கள். மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். புதுவையில் உள்ள அரசின் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்குதான் கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்கள் பரிமாற்ற திட்டத்திற்காக பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள் மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஏற்கனவே புரிந்து ஒப்பந்தணங்கள் புதுவை அரசாங்கத்தால் போடப்பட்டிருக்கிறது இதன் ஒரு பகுதியாக இங்கிருந்து மாணவர்கள் தற்போது சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களில் சென்று வர இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சார்லஸ் ஸ்டூவர்ட் பல்கலைக்கழகம், இத்தாலியின் போகியா பல்கலைக்கழகம் மற்றும் டுசியா பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல உள்ளனர். இதற்காக வெளிநாடு செல்லும் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முதலமைச்சர் ரங்கசமையிடம் வாழ்த்து பெற்றார்கள் மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ம் தேதி வரை அவர்கள் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News