புதுச்சேரி: இனி இது இல்லாம வெளியில் போகாதீங்க... வார்னிங் கொடுக்கும் நிர்வாகம்...

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்.

Update: 2023-04-08 14:15 GMT

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கியுளது. ஒருநாள் பாதிப்பு சுமார் 6 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவகிறது. இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


எனவே புதுச்சேரி முழுவதும் இந்த ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த மக்கள் பொது இடங்களில் செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறார்கள். எனவே நோய்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். யாராவது புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள இருந்தால் அவர்களும் முன் எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.


மேலும் கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் 15 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News